மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது! அது என்ன 1 ரூபாய்?

மன்னிப்பு கேட்டே தீரவேண்டும் என்று சொல்லிச்சொல்லி ஓய்ந்துபோன உச்ச நீதிமன்றம், ஒருவழியாக இன்று பிரசாந்த் பூஷணுக்கு தீர்ப்பு வழங்கியே விட்டது.


அதன்படி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அப்படி 1 ரூபாய் அபராதத்தை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிடில் 3 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

இப்போது அனைவர் முன்னும் நிற்கும் கேள்வி, அந்த 1 ரூபாய் அபராதத்தை பிரசாந்த் பூசண் கட்டுவாரா என்பதுதான். ஏனென்றால், அந்த. ஒரு ரூபாய் என்பது வெறும் ரூபாய் அல்ல அந்த ஒற்றை ரூபாயில் இருப்பது தன்மானம், சுயமரியாதை, எதிர்ப்பு வடிவம் என எல்லாமும்தான் இருக்கிறது.

அதேநேரம், இதேபோன்று வேறு ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு செய்திருந்தால், இத்தனை மென்மையாகத்தான் நீதிமன்றம் விசாரிக்குமா? 1 ரூபாய்தான் அபராதம் விதிக்குமா என்ற விவகாரமும் விலல்ங்கமாகி வருகிறது.