கொரனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பூசியை பெண் உடலில் செலுத்தும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை தடுக்கும் தடுப்பூசி..! முதல் முறையாக பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது..! என்ன நேர்ந்தது தெரியுமா?
கொரனா வைரஸ் பரவாமல் இருக்க அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி முதல் முதலான ஜெனிபர் ஹெலர் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் அந்த பெண்ணுக்கு கெரானா பாதிப்பு ஏற்படவில்லை என்றால் அந்த மருந்து பின்னர் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படும்.
அந்த ஊசி போட்டுக்கொண்டால் கொரனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் செட்டில் நகரில் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கிறது.
தற்போது முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி ஜெனிபர் ஹெலர் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெனிபர் ஹெலர் கூறியபோது கொரனா பாதிப்பு ஏற்பட்டு உலகமே நிலைகுலைந்துள்ளது. எனவே நம்மால் என்ன உதவி செய்யமுடியும் என யோசித்தேன்.
அதனால்தான் ரிஸ்க் எடுத்து இந்த மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைத்தேன். என்னால் பலரும் பயன் அடைவார்கள் என்றால் அதைவிட என்ன சந்தோஷம் வேண்டும். தற்போது முதல் டோஸ் கொடுத்திருக்கிறார்கள் 4 வாரங்களுக்கு பின்னர் 2வது டோஸ் தருவார்கள். இதுபோன்று 14 மாதங்களுக்கு தருவார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.