சரியா நேரத்தில் ரத்தம் கொடுத்து கர்ப்பிணியை காப்பாற்றிய போலீஸ்காரர்..! திருச்சி நெகிழ்ச்சி!

தக்க சமயத்தில் இரத்தம் கொடுத்து கர்ப்பிணிக்கு உதவிய காவலர்


திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை காமராஜர் சிலை சோதனைச்சாவடியில் 06-04-2020 அன்று காவலர் திரு.சையது அபுதாகீர் என்பவர் பணியில் இருந்த போது அந்த வழியாக சோகத்தோடு நடந்து வந்த இரட்டியப்பட்டியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான திருமதி.சுலோச்சனா அவரது கணவரையும் அமர வைத்து ஏதேனும் உதவி தேவையா என்று விசாரித்தார். அப்போது¸ திருமதி.சுலோச்சனாவிற்கு அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த இழப்புக்கு ஈடாக¸ ஏதேனும் வகை இரத்தம் ஏற்பாடு செய்து வர மருத்துவ நிர்வாகம் சொன்னதாக கூறியுள்ளார்கள்.

இதை கேட்டறிந்த காவலர், தனது அலுவல் முடிந்த உடனே, அவர்களை மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான இரத்தத்தை தானே கொடுத்துள்ளார். மாலையில்¸ நடைபெற்ற அறுவை சிகிச்சையில் திருமதி. சுலோச்சனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தக்க சமயத்தில் உதவிய காவலரை¸ அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இரத்த தானம் செய்வோம் மனித நேயம் காப்போம் . வாழ்த்துக்கள்!