கொடும் நோயால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற காதலனை காப்பாற்ற தன்னுயிரை கொடுக்க காதலி முன்வந்த நிலையிலும் காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொடும் நோய்! உயிர் கொடுக்க முன்வந்த காதலி! ஆனாலும் உயிரிழந்த காதலன்!
சேலம் மாவட்டம் செந்தூரப்பட்டியை சேர்ந்தவர் செண்பகம். 26 வயதான இவர்
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அதே
காவல் நிலையத்தில் தன்னுடன் பணியாற்றி வரும் காவலர் ஜெயதேவனுடன் செண்பகத்திற்கு
காதல் அரும்பியுள்ளது. அந்த காவலரும் செண்பகத்தை காதலித்துளளார். இருவரும்
விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவில்,
குளங்களுக்கு சென்று செண்பகம் தனது காதலை வளர்த்துள்ளார்.
இந்த நிலையில் செண்பகத்தின் காதலருக்கு திடீரென உடல்
நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீரக பாதிப்பு அவருக்கு
இருப்பது தெரியவந்தது. நோயின் தீவிரம் அதிகம் இருப்பதால் அவர் குணமாவது கஷ்டம்
என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மனம் உடைந்த ஜெயதேவன் எலி மருந்தை
சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் திருச்சி தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஜெயதேவனுக்கு உடல் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறுநீரகம் கிடைப்பது மிகவும் அரிது என்று சொல்லப்படுகிறது. இதனால் செண்பகம் மனம் உடைந்துள்ளார். மனம் ஆறுதல் தேடி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு செண்பகம் சென்றுள்ளார்.
அங்கு சாமி
தரிசனத்தை முடித்துவிட்டு மருத்துவமனையில் உள்ள தனது உறவினர்களை தொடர்பு கொண்டு
காதலனின் உடல் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு தொடர்ந்து அவர் உடல் நிலை
மோசமாகவே உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த செண்பகம் அருகில்
உள்ள கடைக்கு சென்று காதலன் செய்தது போலவே எலி மருந்து வாங்கியுள்ளார்.
பின்னர் மீண்டும்
கோவிலுக்கு வந்த செண்பகம் தனது உயிரை எடுத்துக் கொண்டு தனது காதலனுக்கு உயிரை
கொடுக்குமாறு சுவாமியிடம் கூறிவிட்டு எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால்
மயங்கிய செண்பகம் அப்படியே கோவில் தரையில் விழுந்துள்ளார். அங்கு முதலுதவி
செய்யப்பட்டு செண்பகம் திருச்சி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் காதலன் ஜெயதேவ் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்து செண்பகம் அழுது துடித்துள்ளார்.
தன் உயிரை எடுத்துக்
கொண்டு தனது காதலன் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று அவர் அழுது புலம்பியது
அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே காவலர் ஜெயதேவன் அவசரப்பட்டு விஷம்
அருந்திவிட்டதாகவும், அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு சென்று இருந்தால்
காப்பாற்ற வாய்ப்பு இருந்தததாகவும் சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.