தோணியுடன் மோத தயாராகும் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷாப் பாண்ட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்கவுள்ளது.


இந்த இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியையும் தனது முதல் போட்டியில் வென்றுள்ளது.

இதனால்  இரு அணிகளும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் அணைத்து வீரர்களும் சீனியர் வீரர்கள்.

டெல்லி கேபிட்டல்ஸ்  அணியை பொறுத்தவரை ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஸாப்  பாண்ட் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் யார் வெற்றி பெற போவதென்று.