தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று சந்தோஷத்தில் இருந்த தந்தை, குழந்தைகளுக்கு எடுக்கப்பட்ட டிஎன்ஏ முடிவில் இரட்டை குழந்தைகளின் ஒன்று தன்னுடைய குழந்தை அல்ல என்று முடிவு வெளியானதால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இரட்டைக் குழந்தையில் 1 குழந்தைக்கு தான் நீங்கள் அப்பா..! பிரசவத்திற்கு பிறகு கணவனை அதிர வைத்த மனைவி!
சீன நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்வதற்காக குழந்தைகளுக்கு டிஎன்ஏ சோதனை எடுப்பது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தம்பதியினர் ஒருவருக்கு இரட்டை குழந்தை சமீபத்தில் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கும் விதிப்படி டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை முடிவில் இரட்டைக் குழந்தைகளின் தந்தைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்த இரட்டை குழந்தைகளில் டிஎன்ஏ முடிவில் ஒரு குழந்தை தன்னுடையது என்றும் மற்றொரு குழந்தை தன்னுடையது அல்ல என்று சோதனை முடிவில் தெரிய வந்தது. இதைக்கண்ட குழந்தையின் தந்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
இந்த சம்பவத்தைப் பற்றி பீஜிங் மாகான தடயவியல் ஆய்வாளர் ஒருவர் தகவலை வெளியிட்டிருந்தார். ஒரு குழந்தையின் டிஎன்ஏ மாறுபடுவதால் அந்த குழந்தை வேறு ஒருவருடன் ஏற்பட்ட உறவின் மூலம் பிறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டிஎன்ஏ சோதனை முடிவுகளை கொண்டு அறிக்கையை தயாரித்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில் இதுபோன்ற சம்பவம் கோடியில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும். இவ்வாறு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் அந்த பெண் ஒரே மாதத்தில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும். பின்னர் இரண்டு வெவ்வேறு நபர்களுடன் உறவு கொள்ள வேண்டும்.
இவ்வாறு வெவ்வேறு தந்தையுடன் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தை மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். இந்த நிகழ்வு ஹீட்டோரோபட்டர்னல் சூப்பர் ஃபெகன்டேஷன் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு மிகவும் அரிதான ஒன்று என்றும் கூறப்படுகிறது.