நீட் திணிங்க.. சிஏஏ மத அடிப்படையில் மக்களைப் பிரிங்க.. என்று அதிமுக மற்றும் பாஜகவை ட்விட்டரில் திமுக கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
நீட் திணிங்க! சிஏஏ மத அடிப்படையில் மக்களைப் பிரிங்க! அதிமுக பாஜகவை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் உதயநிதி ஸ்டாலின்!
திமுக கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்று உருவாகி செயல்பட்டுவருகிறது . இந்த இயக்கம் சுமார் ஒரு கோடி மக்கள் இடம் கையெழுத்து பெற்று குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உள்ள மக்களின் ஆதரவை திரட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த மசோதாவிற்கு எதிராக சுமார் 2 கோடி மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கையெழுத்து இயகத்தின் வெற்றியை அடுத்து திமுக கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புதிய பதிவு ஒன்றை பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், " நீட்-திணிங்க, CAA-மத அடிப்படையில் மக்களை பிரிங்க, எங்க தேவை கமிஷன்'' எனும் அடிமை அதிமுகவை பயன்படுத்தி வெறுப்பரசியலின் கோர முகம் காட்டுகிறது பாஜக. ஆனால், CAAக்கு எதிரான கையெழுத்து இயக்க வெற்றி மூலம், தமிழர்கள் சாதி-மத பேதங்களை கடந்தவர்கள் என நிருபித்துள்ளனர்" என்று வெளியிட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அந்த பதிவுடன் ஒரு யூடியூப் வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார் அந்த வீடியோ பதிவில் நாஞ்சில் சம்பத் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பற்றி விளக்கமாகக் கூறி இருக்கிறார். தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.