சென்னை செங்குன்றம் பகுதியில் நடந்த பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஹெல்மெட் அணியாமல் வேகமாக பைக்கில் சென்ற வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
ஹெல்மெட் அணியாமல் சென்னை சாலையில் பைக்கில் பறந்த விஜய்! வைரல் வீடியோ உள்ளே!
இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னை அருகே நடந்து வருகின்றது. இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் சென்னை செங்குன்றம் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பைபாஸ் ரோட்டில் ஹெல்மெட் அணியாமல் வேகமாக பைக்கை ஓட்டி செல்வது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது . இதனைக் கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
ஆனால் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட தடை உள்ளது. இந்த தடையை மீறி விஜய் பைக் ஓட்டிச் சென்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. போலீஸ் அவர் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது.