விக்கிரவாண்டி நான்காம் சுற்று நிலவரம்..! அடிச்சுத் தூக்கும் அ.தி.மு.க.. நாம் தமிழர், கவுதமன் பரிதாபம்.

விக்கிரவாண்டி தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அ.தி.மு.க. முன்னணி பெற்றுவருகிறது


முதல் சுற்றில் அ.தி.மு.க. 5,312 வாக்குகளும், தி.மு.க.3,265 வாக்குகளும் பெற்றிருந்தன. நாம் தமிழர் கட்சிக்கு 102 வாக்குகளும் கவுதமனுக்கு 21 வாக்குகளும் கிடைத்தன.

இந்த நிலையில் நான்கு சுற்று வாக்குகள் முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க. 7957 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இன்னமும் 18 சுற்றுகள் எண்ணவேண்டிய நிலை இருக்கிறது என்றாலும், இதே முன்னிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அ.தி.மு.க.வின் அதிரடி முன்னணியைக் கண்டு தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் அதிர்ந்து நிற்கின்றன.