தாலி கட்டிய கணவனே மனைவியை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
என் மனைவி ஒரு விபச்சாரி! என் மாமியார் ஒரு புரோக்கர்! பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிட்ட பகீர் கணவன்! மதுரை பரபரப்பு!
மதுரை மாவட்டத்தில் பேரையூர் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியில் ராஜகனி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய வயது 28. இவருக்கு 2 ஆண்டுகள் முன்னர் பேரையூருக்கு அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 38 வயதான ராஜேஷ்கண்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களில் ராஜேஷ் கண்ணாவுக்கு சின்னபூலாம்பட்டியை சேர்ந்த மாலினி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை ராஜகனி கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய கணவரிடம் பலமுறை தட்டி கேட்டுள்ளார். ஆனால் கணவர் திருந்தாத காரணத்தினால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கோபமடைந்த ராஜேஷ் கண்ணா வாட்ஸ்அப்பில் ராஜகனியின் தாய் மற்றும் சகோதரி குறித்து அவதூறான ஆடியோவை பரப்பி வருகிறார். மேலும் ஃபேஸ்புக்கில் தன் மனைவியான ராஜக் அணியின் பெயர் மற்றும் அவருடைய மொபைல் நம்பரை குறிப்பிட்டு சில அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இதனை பொறுத்துக்கொள்ள இயலாத ராஜகனி சாப்டூர் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணாவிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது அணைக்கரைப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.