கர்நாடகாவில் தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையை , தன்னுடைய கணவரை 5லட்சம் ரூபாய்க்கு விற்று கடனை அடைந்துள்ளார் மனைவி.
கள்ளக் காதலன் மனைவிக்கு ஒன் டைம் செட்டில்மென்ட்! ரூபாய் 5 லட்சத்துக்கு விற்கப்பட்ட கணவன்! வாங்கிய இளம்பெண்!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா பகுதியை சேர்ந்த தம்பதியினர் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த பெண்ணின் கணவர் சமீப காலமாகவே மனைவியுடன் வாழாமல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த மனைவி அந்தப் பெண்ணிடம் சென்று பலமுறை சண்டை போட்டுள்ளார் .
பின்னர் தன்னுடைய கணவரை தன்னுடன் வந்து வாழும் மாறு மிகவும் கெஞ்சியுள்ளார் அவரது மனைவி. ஆனால் இதனை எதையுமே கேட்டு கொள்ளாமல் அந்த கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த ஆணின் மனைவிக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததை அறிந்துகொண்ட தவறான தொடர்பு வைத்திருந்த பெண் , அந்த ஆணின் மனைவியை அழைத்து உனக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன் .
அதற்கு பதிலாக உன்னுடைய கணவரை எனக்காக விட்டுக் கொடுத்து விடு என்று கூறியுள்ளார். முதலில் இருக்கு ஒப்புக்கொள்ளாத மனைவி , பின்னர் அந்தப்பெண்ணின் முடிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து தன்னுடைய கணவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் தனக்கு 17 லட்சம் ரூபாய் வேண்டும் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு மற்றொரு பெண் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறி ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை அந்த ஆணின் மனைவியிடம் அளித்துள்ளார்.
இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அந்த ஆணின் மனைவி , இனிமேல் என்னுடைய கணவரை கேட்டு நான் எந்தவித தொந்தரவும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். ஒரு கடன் பிரச்சினைக்காக தன்னுடைய கணவரை விற்ற மனைவி என்ற பெயரைப் பெற்றுள்ளார் அந்தப்பெண். தற்போது இந்த சம்பவமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.