மச்சினிச்சியுடன் உல்லாசம்..! திடீரென வந்த மனைவி! வசமாக சிக்கியதால் கணவன் எடுத்த விபரீத முடிவு!

மனைவி கள்ளக்காதலை கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஆரோவில்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பண்ணீர் என்ற 33 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவியின் பெயர் அருணா. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

அருணாவின் தங்கையின் பெயர் சீதா. சீதாவின் வயது 26. இவர் தன்னுடைய அக்காவின் வீட்டிற்கு அருகே வசித்து வந்துள்ளார். இதனிடையே சீதாவுக்கும், பண்ணீருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்து உள்ளனர். 

இந்த விவகாரமானது அருணாவுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் கணவரையும், தங்கையையும் மிரட்டியுள்ளார். இதனால் கணவர் பன்னீர் மனமுடைந்தார். யாருமில்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்தவுடன் கூச்சலிட தொடங்கினார்.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து பண்ணீரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பன்னீர் தற்கொலை செய்துகொண்ட செய்தியானது சீதாவுக்கு தெரியவந்தது. சீதாவும் மனமுடைந்து போனார். உடனடியாக சீதாவும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். ஆனால் சீதாவை அவருடைய உறவினர்கள் வெகு விரைவாக காப்பாற்றினார். உடனடியாக அவரை புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஆரோவில்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.