உதயநிதி கைது செய்யப்படுவாரா..? சர்ச்சை பேச்சுக்கு வழக்குப் பதிவு.

சசிகலா பற்றி எசகுபிசகாக விமர்சனம் செய்தார் ஸ்டாலினின் சீமந்தப்புத்திரன் உதயநிதி. இதையடுத்து, பெண்களை கேவலப்படுத்துவதுதான் தி.மு.க.வின் வேலை என்று தமிழக பெண்கள் கடும் கோபம் அடைந்துவிட்டனர்.


இந்த விவகாரத்துக்காக காவல் நிலையத்துக்குப் போயிருக்கிறார், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜலட்சுமி. அ.தி.மு.க., வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் குறித்து, அவதூறாகப் பேசி வருகிறார்.

பெண்களை மிக கேவலமாக சித்தரிப்பதுடன், முதல்வர் பழனிசாமி., நற்புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள, உதயநிதி மீது, கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, உதயநிதி மீது இரு பிரிவினருக்கும் இடையே, மோதலை ஏற்படுத்த முயற்சி செய்தல், பெண்கள் பற்றி ஆபாசமாக பேசுதல் உட்பட, நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ், நேற்று வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் கைது செய்து உதயநிதியை விசாரிக்க வேண்டும் என்பதுதான் பலருடைய கோரிக்கையாக இருந்துவருகிறது.  

இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கக் கூடாது' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பேசிய விவகாரமும் தி.மு.க., கூட்டணியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தி.மு.க. வெற்றி அடைந்துவிடும் என்ற எண்ணத்தில் அனைவரும் இருக்கும் நேரத்தில், அதை உடைக்காமல் விடமாட்டார் உதயநிதி என்பதுதான் இப்போது தி.மு.க.வினரின் அச்சமாக இருக்கிறது.