தாவரவியலில் மிரிஸ்டிகா என்ற மரத்தின் காய்களே உலர்த்தப்பட்டு ஜாதிக்காய் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் அதிகமாக விளையும் ஜாதிக்காய், சமையலில் வாசனைப் பொருளாக உபயோகம் செய்யப்படுகிறது.
அழகுக்கு உபயோகிக்கும் ஜாதிக்காயை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?
சமையலில் சேர்ப்பதைவிட கை மருத்துவம் செய்வதற்கும் அழகு குறைபாட்டை நீக்குவதற்குமே ஜாதிக்காய் வீட்டில் பயன்படுகிறது. குறைந்த செலவில் நிறைந்த பயன் தரக்கூடியது ஜாதிக்காய்.
• தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காயை பொடிசெய்து நெற்றி, கண் இமைகளில் தடவிக்கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
• பரு, கரும்புள்ளி உள்ளவர்கள் ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து முகத்தில் பூசிவந்தால் நல்ல பலன் தெரியும்.
• ஜாதிக்காயை உரசி அல்லது பொடியை நெற்றியில் பற்று போன்று போட்டால் தாங்கமுடியாத தலைவலியும் பறந்துபோகும்.
• ஜாதிக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் போன்றவைகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது. தசைப் பிடிப்பை குணமாக்கும் தன்மையும் ஜாதிக்காய் எண்ணெய்க்கு உண்டு.
குழந்தைகளுக்கு ஜாதிக்காயை அரைத்து சிறிதளவு நாக்கில் தடவினால், வயிறு உப்புசம், வயிற்று வலி போன்றவைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.