கொசு கடித்ததால் உடற்பாகங்கள் செயலிழந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்ததால் விமான பணிப்பெண் உயிரிழந்திருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஒரு கொசுக்கடி! உடலுக்குள் கசிந்த ரத்தம்! உறுப்புகள் செயல் இழப்பு! விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!
அப்பிச்சையா ஜெரோன்டி தாய்லாந்து நாட்டிலுள்ள நான் மாகாணத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு விமான பணிப்பெண்னாவார். "தாய் லயன் ஏர்" என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சென்ற வாரத்தில் அப்பிச்சையாவின் உடல்நிலை சற்று மோசமாக தொடங்கியது. தொடர்ந்து அவருடைய வீட்டில் வசிக்கும் உறவினர்களின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இதனால் அவர்கள் வடக்கு தாய்லாந்தில் உள்ள லானா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கொசு கடித்தால் அவர்களுக்கு டெங்கு ஜுரம் பரவியுள்ளதாக கூறியுள்ளனர்.
நோயின் வீரிய தன்மை அதிகமாகி கொண்டிருந்ததால் அப்பிச்சையாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. உடலின் உள் பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க தொடங்கின. மேலும், ரத்தக்கசிவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர் திங்கட்கிழமையன்று உயிரிழந்தார்.
அவருடைய உடல் சொந்த மாகாணத்திற்கு வரவழைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நிகழ்ந்தன.
கொசு கடித்த மூன்றாவது நாளிலேயே பெண்ணொருவர் டெங்கு ஜுரத்தினால் உயிரிழந்திருக்கும் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.