21 சவரன் நகை! கத்தை கத்தையாக பணம்! ஆட்டோவில் தவறவிட்ட பெண்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இன்ஸ்பெக்டர்! குவியும் பாராட்டு!

தவறவிடப்பட்ட 21 சவரன் தங்கநகை மற்றும் பணத்தையும் செல்போன் சிக்னல் மூலம் காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜபாளையத்தில் சேர்ந்தவர் பாண்டியமைதிலி. இவர் தன்னுடைய உறவினர்களுடன் மயிலாப்பூரிலுள்ள தன் சித்தப்பாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அண்ணா சதுக்கம் போன்ற பிரபலமான இடங்களை அவர் உறவினர்களுடன் சுற்றிப்பார்த்துள்ளார்.

பின்னர், அண்ணா சதுக்கத்திலிருந்து மயிலாப்பூருக்கு ஆட்டோவில் வந்துள்ளார். ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டிற்கு சென்ற பிறகுதான் தன்னிடமிருந்த பணப்பையை ஆட்டோவிலேயே விட்டு சென்றதை அறிந்துள்ளார். உடனடியாக மெரினா காவல் நிலையத்திற்கு சென்ற பாண்டியமைதிலி நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். 

மேலும், அந்த பையில் 21 சவரன் தங்க நகைகளும், 25 ஆயிரம் ரொக்க பணமும் இருப்பதாக காவல் துறையினரிடம் கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தனர். அதில் பாண்டியமைதிலி ஆட்டோவில் சென்றதை காவல்துறையினர் உறுதி செய்தனர். 

ஆனால் ஆட்டோவில் சரிவர தெரியவில்லை. உடனடியாக மைதிலி பணப்பையில் செல்போனையும் தவறவிட்டுருந்ததால், செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்க தொடங்கினர்.

அப்போது அந்த பணப்பை புளியந்தோப்பு பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு சென்று ஆட்டோவின் அடையாளங்களை கூறி காவல்துறையினர் ஆட்டோவை கண்டுபிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் இருக்கும் தன்னுடைய ஆட்டோ பே பணப்பை இருந்த சம்பவம் தெரியவில்லை. பத்திரமாக அந்த பையை மீட்டு உதவிய காவல்துறையினருக்கு பாண்டியமைதிலி மற்றும் அவருடைய உறவினர்கள் நன்றி கூறினர்.

இந்த சம்பவமானது புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.