கனவில் மோதிரம் முழுங்கிய பெண்!!! நினைவில் தெரிந்த உண்மை!!! அமெரிக்காவில் பரபரப்பு!!!

நிச்சயதார்த்த மோதிரத்தை பெண்ணொருவர் தூக்கத்தில் விழுங்கிய சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் அமைந்துள்ளது. மாகானத்துக்கு உட்பட்ட சான் டியாகோ என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜென்னா எவான்ஸ். இவருடைய வயது 29. செவ்வாய்க்கிழமை இரவன்று வழக்கம் போல தூங்கியுள்ளார். அப்போது இவருக்கு கெட்ட கனவு வந்துள்ளது. அதாவது வருங்கால கணவரை யாரோ கொன்றுவிடுவது போன்று கனவு கண்டுள்ளார். அப்போது அவருடைய கணவர் மோதிரத்தை முழுங்கி விடுமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி அவர் தன்னுடைய மோதிரத்தை விழுங்கியுள்ளார். மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்த போது மோதிரம் அவருடைய கையில் இல்லை. இதனால் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கண்ட கனவு அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக நிகழ்ந்தவற்றை தன் வீட்டில் உள்ள உறவினர்களிடம் கூறியுள்ளார்.

முதலில் உறவினர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் ஜென்னாவின் வற்புறுத்தலினால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் தனக்கு நேர்ந்த அவற்றை அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குவதற்காக எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போது வயிற்றில் மோதிரம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் மோதிரத்தை வெளியே எடுத்துவிடலாம் என்று கூறியுள்ளனர். 

அவருக்கு சிறப்பான முறையில் எண்டோஸ்கோப்பி சிகிச்சை செய்யப்பட்டு மோதிரம் வெளியே எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவருடைய கணவரிடமிருந்து உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை என்று மருத்துவர்கள் எழுதி வாங்கியுள்ளனர். அந்த சமயத்தின் போது ஜென்னா மனமுடைந்தார்.

தற்போது கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவர் முடங்கிய மோதிரம் வைர மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.