டிக்டாக் மோகத்தால் காட்டுக்குள் நுழைந்து காணாமல் போன இளைஞன் - திருப்பதியில் நடந்த விபரீதம்

டிக் டாக் வீடியோ எடுக்கும் மோகத்தில் இளைஞர் ஒருவர் செய்துள்ள காரியம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பதி அருகே ரங்கம்பேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் முரளி கிருஷ்ணா என்ற 21 வயது மாணவர் 3-ஆம் மைக்ரோபயாலஜி படித்து வருகிறார். டிக் டாக் செயலியின் மீது அதீத ஆர்வம் உடையவராவார்‌. இந்நிலையில் பொதுமக்கள் செல்வதற்கு அஞ்சக்கூடிய சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் மதியம் தனியாக சென்றுள்ளார்.

பொது மக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் இவர் தனியாக சென்றுள்ளார். ஸ்ரீவாரி மேட்டு பகுதியில் உள்ள மலையின் மீது தேசிய கொடியை ஏற்றி வைத்து அதற்கு சல்யூட் அடித்துள்ளார். அங்குள்ள இயற்கை வளங்களை பெரிய செல்போனில் படம் பிடித்துள்ளார். 

மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மாலை நேரமாகியுள்ளது. இதனால் வெளிச்சமில்லாமல் எவ்வழியே செல்வது என்பதை முரளி கிருஷ்ணாவால் கண்டுபிடிக்க இயலவில்லை. தன்னுடைய இருப்பிடத்தை கூகுள் லொகேஷன் மூலம் தன் நண்பருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் தன் மொபைல் போனில் சார்ஜ் இல்லாததால் கடும் அவதிப்பட்டுள்ளார். சம்பவம் அறிந்த போராடினாலும் பெற்றோரும், கல்லூரி நிர்வாகத்தினரும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறையினர் அந்த லொகேஷனை வைத்து கொண்டு விடியற்காலையில் காட்டுப்பகுதியில் தேடி அலைந்தனர்.

பின்னர் முரளிகிருஷ்ணா அவரை கண்டுபிடித்தனர். இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் தங்கி இருந்ததால் முரளிகிருஷ்ணா சற்று மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இரவு நேரத்தில் எந்தவித கொடிய விலங்கும் காட்டுப்பகுதியில் முடியாத காரணத்தினால் முரளி கிருஷ்ணா எவ்வித பெரிய ஆபத்துமின்றி தப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.