நான் தோற்றுவிட்டேன்..! எனது இந்த நிலைக்கு காரணம் அவன் தான்...! ஜெயஸ்ரீ தற்கொலை கடிதத்தில் பரபர தகவல்!

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ மற்றும்.அவரது இரண்டாவது கணவர் ஈஷ்வர் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் சீரியல் நடிகர்கள்.


இவர்களது மகளும் தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையில் மற்றொரு நடிகையான மகாலஷ்மியுடன் கணவருக்கு தவறான உறவு உள்ளதாகக் குற்றம் சாட்டினார். எல்லா தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்களிலும் இவர்களது குடும்ப சட்டை பரபரப்பாக பேசப்பட்டது எனலாம்.

அந்த வகையில் இருவரது தரப்பிலும் மகாலஷ்மி- ஈஸ்வர் மீது குற்றம் சாட்ட பட்ட நிலையில் ஜெயஸ்ரீ - அனில் மீதும் குற்றம் சாட்டபட்டது. இதற்கிடையில் ஆளாளுக்கு அவர்களது நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் தரப்பு ஆதாரங்களை வெளியிட்டனர். இந்த நிலையில் சமீபகாலமாக அமைதியாக இருந்த ஜெயஸ்ரீ தற்போது தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதற்கிடையில் ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. நான் தோற்றுப்போயிட்டேன். என்னை நினைச்சு கவலை படாதமா, உன் டான்ஸ் கெரியரை மட்டும் விட்டுறாத அம்மாவோட இந்த முடிவுக்கு என்னை மன்னிச்சிடு. அக்கா, அம்மா நான் கேட்ட போதெல்லாம் ஓடி வந்து உதவிப் பண்ணிருக்கீங்க , என்னால இந்த நிலையில் வாழ முடியல கொஞ்சம் கொஞ்சமா சாகுறதுக்கு மொத்தமாக் செத்து போறேன்.

என்னை இந்த நிலைக்கு தள்ளியது எனது கணவர் ஈஷ்வர் மற்றும் அவரது குடுமபத்தினர் தான், எனக்கு சரியாக வேலையும் இல்லை, சாப்பாடும் இல்லை. நான் வாழவே விரும்பலன்னு கண்ணீர் மல்க உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்க மாத்திரையை விழுங்கி ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார்.

அவரது அந்த முடிவுக்கு காரணம் கணவர் ஈஷ்வர் மற்றும் அவர்களது குடும்பத்த்கினர் தான் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதற்கிடையில் தற்கொலை க்கு முயன்ற ஜெயஸ்ரீ சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது கடிதத்தின் அடிப்படையில் கணவர் ஈஷ்வரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளிதாகியுள்ளது.