செக்ஸ் மிகவும் அழகான ஒரு சமாச்சாரம்! இளம் நடிகைகள் முன்பு விஜய் அப்பா சிலாகிப்பு!

செக்ஸ் மிகவும் அழகான ஒரு சமாச்சாரம் என்று இளம் நடிகைகளை வைத்துக் கொண்டு விஜயின் அப்பா எஸ்ஏசி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏசி ஜெய்யை வைத்து கேப்மாரி என்று ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் ஜெய், நாயகிகள் அதுல்யா, வைபவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தவர் திடீரென செக்ஸ் பக்கம் தனது பேச்சை திருப்பினார். அது ஒரு அழகான சமாச்சாரம் என்று சிலாகித்து எஸ்ஏசி பேசிய போது மேடையில் இருந்த நடிகைகள் இருவரும் தேம்ப தேம்ப விழிக்க ஆரம்பித்தனர். 

ஆனால் அத்தோடு எஸ்ஏசி விடவில்லை அந்த சமாச்சாரம் மிகவும் அழகானது. ஆனால் அதனை இங்கு தவறுதலாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ரகசியமாக வைத்து வைத்து அதனை தப்பான விஷயமாக்கிவிட்டார்கள் என்று அலுத்துக் கொண்டார் எஸ்ஏசி.

கேப்மாரி பட விழாவில் எதற்காக எஸ்ஏசி இப்படி பேசினார் என்று பலருக்கும் புரியவில்லை. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்ஏசியிடம் அந்த சமாச்சாரம் அழகான ஒன்று என்று கூறியுள்ளீர்கள் அப்படி என்றால் கேப்மாரி படத்தில் செக்ஸ் காட்சிகள் உண்டா என்று கேட்டனர்.,இல்லை அப்படி ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார். அப்படி என்றால் எதற்காக அந்த சமாச்சாரத்தை பற்றி படவிழாவில் இரண்டு இளம் நடிகைகளை வைத்துக் கொண்டு பேசினார் என்று சலசலப்பு ஏற்பட்டது.