8 மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த மாத்திரை சாப்பிடனும்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

அட்ரினல் சுரப்பி பாதிக்கப்பட்டதால் உயிருக்கு ஆபத்தை சந்தித்ததாக சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.


44 வயதான சுஷ்மிதா சென் ஹைதராபாத்தில் பிறந்தவர். தனது 18 ஆவது வயதில் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தைப் பெற்று இந்தியாவில் யாரும் செய்திராத சாதனையை நிகழ்த்தினார். இதையடுத்து இந்தி வங்காளம் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். தமிழில் ரட்சகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையடுத்து அர்ஜுன் நடித்திருந்த முதல்வன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்த நிலையில் 2014ஆம் ஆண்டில் தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தொடர்பாக தற்போது மனம் திறந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தனக்கு என்ன நேர்ந்தது என்பதை மருத்துவர்கள் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

தீவிர பரிசோதனைக்கு பின்னர் அட்ரினல் சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும் தான் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். ஆனால் மாத்திரை மூலம் இதை சரி செய்ய வாய்ப்பு இருந்ததாகவும் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தான் உயிர் பிழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.