விக்கிரவாண்டி தொகுதியில் இன்னமும் 5 சுற்றுகள் மட்டுமே எண்ணப்பட உள்ளது.
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. ஜெயிச்சாச்சு! எடப்பாடிக்கு குஷியோ குஷி!
இந்த சுற்றுகளில் 30 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் மட்டுமே உள்ளன. ஆனால், இப்போதே அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 40 ஆயிரத்துக்கும் மேல் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் இருப்பதால், அவரது வெற்றி உறுதியாகியிருக்கிறது.
இந்த செய்தி அ.தி.மு.க. தரப்பில் மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பேசிய எடப்பாடி, இரண்டு தொகுதியிலும் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளோம். இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அமைச்சர்களுக்கும் தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக பா.ம.க. தே.மு.தி.க., பா.ஜ.க. போன்ற அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக், சரத்குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இடைத்தேர்தல். எதிர்க்கட்சியினர் கடந்த நாடாளுமன்றத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள்.
இப்போது மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அதனால்தான் கழக வேட்பாளர்களுக்கு அமோக வெற்றி அளித்துள்ளார்கள் என்று தெரிவித்து உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த வெற்றி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க.விடம் இருந்து விக்கிரவாண்டி தொகுதியையும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாங்குநேரி தொகுதியையும் பெற்றுள்ளோம் என்று நன்றி தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.