பன்னீருக்கு நல்ல யோகமடா..! அமெரிக்காவுக்கு 10 நாள் பயணம்.

ஆட்சியில் எது நடக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுப் பயணங்கள் மிகவும் சிறப்பாக நடக்கிறது. மோடியின் வழிகாட்டுதலில் நடக்கும் தமிழக அரசும் மோடியைப் போன்றே, வெளிநாடுகளில் சுற்றுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.


சமீபத்தில் முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் உலக அளவில் சுற்றுப்பயணம் சென்று வந்தனர். அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பதவியை கொடுக்காமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இஸ்ரேலுக்குச் செல்லும் முதல்வரின் பயணம் தள்ளிப்போடப்பட்டது. 

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. வரும் 7-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்க புறப்படும் பன்னீர்செல்வம் 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஓ.பி.எஸ் வசம் உள்ளது. அவரது துறை சார்ந்த திட்டங்களுக்காக வெளிநாட்டில் ஓய்வு எடுக்கிறாராம்.

வெளிநாட்டுப் பயணம் சென்றுவந்த எடப்பாடி எக்கச்சக்கமாக முதலீடுகளை அள்ளிவந்ததாகச் சொன்னார்கள். இவர் என்னவெல்லாம் கொண்டுவரப் போகிறாரோ..?