தாய் இரண்டாவது குழந்தையை சுமக்கும்போதும், பெற்றபிறகும், வளர்க்கும்போதும் முதல் குழந்தை மனதளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனை நிவர்த்தி செய்யவேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.
இரண்டாவது குழந்தை சுமக்கும் பெண்களின் கனிவான கவனத்துக்கு!!
• சின்னக் குழந்தையை கவனிப்பது முக்கியம் என்றாலும், முதல் குழந்தை அதிமுக்கியம் என்று சொல்லி வையுங்கள்.
• இரண்டாவது குழந்தைய கவனிக்கும் கடமை உனக்கும் உண்டு என்று சொல்லிக்கொடுத்து, அருகிலேயே இருந்து கண்காணிக்கத் தூண்டுங்கள்.
• இரண்டாவது குழந்தைக்கு பொம்மை யாரேனும் வாங்கிவந்தால், முதலில் இது பெரிய பிள்ளைக்குத்தான் என்று எடுத்துக்கொடுத்து விளையாடச் சொல்லுங்கள்.
• முதல் குழந்தையை பெரிய நபர் போன்று மதித்து ஆலோசனை கேட்டால், மிகவும் மகிழ்ந்துபோகும்.
இரண்டாவது குழந்தை மீது ஏற்படும் பொறாமையால் சின்னக் குழந்தைக்கு ஏதாவது வகையில் காயம் ஏற்படுத்த முதல் பிள்ளை முயற்சி செய்யலாம். அதனால் இந்தப் பிரச்னையை மிகவும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டும்.