ஆதி மனிதன் தனது கற்பனைகள் எண்ணங்களை சிந்தனைகளையும் அன்றைய முக்கிய நடப்புகளை பற்றி கல்வெட்டில் செதுக்கி வைத்தான் பிறகு ஓலைச்சுவடி செம்பு தகட்டில் எழுதினான் மாட்டு தோலில் எழுதினால் காகிதம் வந்த காலம் மனிதனின் எழுத்துக்கள் வேகம் எடுத்தது. இன்றைய விஞ்ஞான காலத்தில் கணிணி மூலம் எழுத்துக்கள் மற்றும் விண்ணை முட்டும் அளவில் எழுத்துக்கள் விதவிதமான வடிவங்கள் செய்ய தொடக்கி விட்டன.
108 முறை தெய்வ திருநாமம் எழுதுவதால் என்ன பலன் கிடைக்கும்..? ஜோதிடர் சொல்லும் பலன் இதோ...
எழுத்து வடிவங்கள் உருமாறி போனாலும் எழுத்து .. எழுத்து தான்.கடவுள் நம்மை படைக்கும் போது தலையில் எழுதிய எழுத்தை விதியை என்று சொல்வோம். இந்த விதி தான் நம்மை படாத பாடு படுத்துகிறது.நமது பிரச்சனைகளுக்கு எப்படியாவது தீர்வு காண முடியாதா என கடவுளை நம்பி பல வேண்டுதல் வைக்கிறோம் அவற்றில் ஒன்று தான் தெய்வத்தின் திருநாமத்தை 108 அல்லது 1008 முறை எழுதி கடவுளுக்கே செலுத்தி மகிழ்வது
பொதுவாக பக்தியில் பல வகை உள்ளது. அவை எல்லாமே தெய்வம் பார்த்து கொள்ளும் என அமைதியாக இருந்து விடுவது இதன் பிறகு தன்னால் முடிந்த வரை அனைத்து முயற்சிகளும் செய்து விட்டு அதன் பலனை தெய்வம் தரட்டும் என இருப்பது. மேலும் இன்னும் சிலர் தெய்வத்திடம் பேரம் பேசுவது இதை செய்து கொடுத்தால் நான் இதை செய்கிறேன் என வேண்டி கொண்டு இது போல் 108 அல்லது 1008 அல்லது லட்சம் முறை கூட எழுதுவார்கள் இன்னும் சிலர் கடவுளே இல்லை எல்லாம் நம் முயற்சியின் பலன்படி நடக்கும் என இருப்பது.
நாம் என்ன தான் கடவுளின் மீது தீவிர பக்தி வைத்து இருந்தாலும் கடவுளுக்கு நம்மை பிடிக்க வேண்டும் தெய்வ வழிபாடுகளில் இதுவும் ஒரு வகை என்றாலும் 108 அல்லது 1008 முறை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பதால் நம் மனம் எண்ணம் ஒரே நிலையான தெய்வ திருநாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பதால் குறைந்த பட்சம் யோக நிலையில் இதுவும் ஒன்று.
மேலும் நமது கையெழுத்து அழகாக எழுத எழுத நமது தலையெழுத்து அழகாக மாறும் என்கிற நம்பிக்கை தான் வீண் போகாமல் உள்ளது. இது போல் எழுதி தெய்வத்தின் அருளை பெறக்கூடியவர்கள் யார் என்பதை ஜோதிட ரீதியாக பார்ப்போம்.
1. எழுத்து எல்லாம் அதிபதி - புதன்
2. கைப்பட எழுத இரண்டாம் பாவம்.
3. தெய்வ அருள் கிடைக்க ஒன்பதாம் பாவம்
4. தெய்வ அருள் பெற குரு தயவு வேண்டும்
5. புதன் - குரு லக்னம் அல்லது ஒன்பதாம் பாவம் தொடர்பு இருந்தால் இது போல் முயற்சி செய்யலாம்
6. புதன் - குரு இரண்டாம். சம்பந்தம் இருந்தால் எழுதியே தெய்வ அருளை பெற முடியும்
7. புதன் - சூரியனோடு அல்லது சனியோடு சேர்க்கை இருந்தால் எழுத்துக்களுக்கு ஒரு சக்தி இருக்கும்.
8. சனி தனது பார்வையால் 3,7,10-ல் புதனை பார்க்க இருந்தால் இவர்கள் எழுத்துக்கு தெய்வமே இறங்கி வரும்.
9. குரு ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் தெய்வ அருள் தானாக அமையும்
10. புதன் இரண்டாம் தொடர்பு இருந்தால் எழுதும் எழுத்துக்கு தெய்வமே கட்டுபட்டு இருக்கும். மேற்கண்ட கிரக அமைப்புகள் தங்களது ஜாதகத்தில் இல்லையென்றால் நீங்கள் என்ன தான் எழுதினாலும் தெய்வ அருளை பெற முடியாது.
கணித்தவர்
ஜோதிட பிரம்மம். சூரியநாராயணமூர்த்தி
ஈரோடு _- 638 001
செல் .. - 9443923665 & 9865065849