பொள்ளாச்சி பாணியில் ஃபேஸ் புக் மூலம் பாலியல் தொல்லைக்கும், மிரட்டலுக்கும் ஆளான சென்னை பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலும் பொள்ளாச்சி பாணி கொடூரம்! பேஸ்புக் நண்பர்கள் பாலியல் தொல்லை! பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த இருதினங்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பெண்ணின் தற்கொலைக்கான காரணத்தை அவரது கணவர் அயூப்கான் வெளியிட்டுள்ளார்.
தனது மனைவியின் தற்கொலைக்கு பேஸ்புக் நண்பர்கள் தான் காரணம் என அயூப்கான் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கிற்காக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டிருக்கிறார் அயூப் கானின் மனைவி. அவருக்கு ஃபேஸ்புக் நண்பர்களும் கிடைத்ததாகக் கூறுகிறார் அவர்.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாசிம் அக்ரம், முகமது மற்றும் பர்ஜீஸ் என்ற மூவரும் அயூப்கான் மனைவியின் பேஸ்புக் நண்பர்களாக இருந்துள்ளனர். நட்பின் நம்பிக்கையில் அந்தப் பெண் அவர்களை நேரில் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகுதான் அவர்களின் சுயரூபம் தெரியவந்தது.
புகைப்படங்களை வைத்து அவர்கள் தனது மனைவியை மிரட்டி பணம் வாங்கியதாக ஆயுப் கான் தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவியிடம் அவர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ள அயூப் கான், தனது மனைவியைத் தேற்ற, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கத் தயாராக இருந்த போது தனது மனைவி திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.
அவர்கள் மூவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அயூப் கான் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அயூப்கானின் மனவியின் செல்போனில் இருந்து விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.