அடுத்த ஆபாச வீடியோவ ரிலீஸ் செய்யப்போறேன்! டிராவல்ஸ் அதிபரை மிரட்டும் பெண் போலீஸ்! கோவை திகுதிகு!

கோவை: ''என்னைப் பற்றிய ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்று கூறி பெண் போலீஸ் மிரட்டுகிறார்,'' என தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சதீஷ் குமார். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த பெண் போலீஸ் கவிதா என்பவருடன் சதீஷ்க்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

கவிதாவும் கணவனை பிரிந்து வாழ்பவர் என்பதால், அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருப்பது வாடிக்கையாக இருந்துள்ளது. இவர்கள் தொடர்பாக ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகவே, உடனடியாக கவிதா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  

தற்போது சதீஷ் குமார் கோவை மாவட்ட எஸ்பியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ''பெண் போலீஸ் கவிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஆனாலும், அந்த பெண் போலீசை நான் பிரியவில்லை. அவருடன் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களுக்கு உல்லாசப் பயணம் சென்று வந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு அத்திவரதர் தரிசனத்திற்குக் கூட என்னை அவர் அழைத்துச் சென்றார். இதற்கிடையே எனது அலுவலகத்தில் குறிப்பிட்ட பெண் போலீஸ் கவிதாவும், நானும் உல்லாசமாக இருந்தோம். இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தன. இதனை எனது ஊழியர் ஒருவர் அவரிடம் கொடுத்துள்ளார்.

அதை வைத்துக் கொண்டு பெண் போலீஸ் கவிதாவும், அவரது தோழியும் என்னை மிரட்டி வருகின்றனர். பணம் தரும்படி கேட்டனர். நான் மறுக்கவே, கடந்த ஜூலை 26ம் தேதி அந்த வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டனர். இதனால், கவிதா ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால், அதன் பின்னும் திருந்தாத கவிதா மேலும் 2 ஆபாச வீடியோக்கள் இருப்பதாகக் கூறி, என்னை மிரட்டி இதுவரை ரூ.3 லட்சம் வரை பணம் பிடுங்கியுள்ளார்.

மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீதும், அவருக்கு உடந்தையாகச் செயல்படுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்,'' எனக் கூறியுள்ளார். 

பெண் போலீஸ் மீது கூறப்பட்டுள்ள இந்த புகார் கோவை மாவட்ட போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.