தகாத உறவால் பிரகதிக்கு நகை, பணம் கொடுத்து கொடுத்தே கடனாளி ஆனேன்! சதீஷ் பகீர் வாக்குமூலம்!

கோவையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணால் நான் கடனாளியாக ஆனேன் என கைதான சதீஸ்குமார் அதிரடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


சதீஷ் வாக்குமூலத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், “தானும் இறந்து போன தனது அத்தை மகளும் சிறு வயது முதலே ஒருவருக்கொருவர் விரும்பி வந்தோம். இருவரும் திருமணம் செய்ய விரும்பிய நேரத்தில் எனக்கு எனது விருப்பமில்லாமல் எனது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். இருப்பினும் தொடர்ந்து இறந்து போன கல்லூரி மாணவியுடன் பழகி வந்தேன்.

தனக்கு குழந்தை பிறந்த பின்பு அவருடன் பேச்சுவார்த்தையை குறைத்து கொண்டேன். இந்நிலையில், அவருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க தேதி குறித்தனர். அதனால் இனி என்னை தொந்தரவு செய்யமாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால் அவர் எனக்கு போன் செய்து என்னுடன் தான் வாழ்வேன் எனவும், திருமணத்தில் விருப்பமில்லை எனவும் புலம்பி வந்தார். அவருடன் பழகிய காலங்களில் அவருக்கு நகை, உடை வாங்கி கொடுத்து கடனாளியாகி ஆனேன். 

இந்நிலையில் அவள் மேலும் மேலும் என்னிடம் நகை பணம் கேட்டு நச்சரித்து வந்தார். என்னுடன் தான் வாழ்வேன் என கூறி வந்தார். அதனால் கோபமடைந்து வாழ்க்கை வீணாகிவிடும் என பயந்து, திட்டமிட்டு அவரை அழைத்து சென்று கொலை செய்து உடலை சாலையோரம் வீசி சென்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.