கொரோனா தாக்கம் இருக்கும் நிலையிலும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி இன்று திண்டுக்கல் சென்றார்.
திண்டுக்கல்லில் கொரோனா ஆய்வு..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்..!
திண்டுக்கல்ல் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மகளிர் திட்டம் சமூக நலத்துறை தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ. 8 கோடியே 69 லட்சம் மதிப்பெண் மேற்கொள்ளப்பட்டுள்ள 42 புதிய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.8 கோடியே 88 லட்சம் மதிப்பில் முடிவற்ற கட்டுமான பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.