எந்த ஒரு விஷயம் என்றாலும் என் ஜாதி, என் மொழி, என் கடவுள் என்று சண்டைக்கு வருபவர்களே அதிகம். கடவுளுக்காக என் உயிரையும் கொடுப்பேன், என் மதத்துக்காக எதுவும் செய்வேன் என்று சொல்பவர்கள் அத்தனை பேரும் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
எங்க மதத்துக்காக உயிரையே விடுவேன்னு சொன்னவங்க எல்லோரும் வரிசையா வாங்கப்பா... டிக்கெட் ரெடி.
ஆம், கொரோனா என்ற சாத்தான் விஷக்கிருமி, உலகத்தில் அத்தனை மக்களும் சுயநலம் மிக்கவர்கள்தான். யாருக்கும் கடவுள் மீது கொஞ்சமும் மரியாதை இல்லை என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டிவிட்டது.
ஆம், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று எல்லோருமே தன் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் எந்தக் கடவுளுக்கும் தரமாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது. அதற்கு உதாரணம்தான் மெக்கா.
ஆம், இப்போது புனிதத்தலமான மெக்கா வெறிச்சோடி கிடக்கிறது. ஈரானில் வெள்ளிக் கிழமை தொழுகை தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்படுகிறது. கூட்டமே இல்லாத இந்த நாளில் மெக்காவுக்குப் போக யாரும் முன்வருவதில்லை.
சரி, கிறிஸ்தவர்கள் தைரியமானவர்கள் என்றால், அங்கேயும் நிலைமை அப்படித்தான். ஆம், வாடிகனில் போப்பாண்டவர் பொதுமக்களை சந்திப்பதை நிறுத்தி வைக்கிறார். கூட்டத்தினால் கொரோனா வந்துவிடும் என்ற அச்சமாம்.
இவர்களைவிட மிகப்பெரும் அளவுக்கு பயத்தைக் காட்டியிருப்பவர் நம்முடைய மோடிதான். ஆம், ஊர், உலகமெல்லாம் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்தவரை கட்டிப் போட்டுவிட்டது கொரோனா. அது மட்டுமின்றி, ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதையும் நம் பிரதமர் மோடி தவிர்த்தே விட்டார்.
அது சரி, உசுருன்னா சர்க்கரைப் பொங்கல் என்பது உண்மைதானே.