டெல்லி: மசாஜ் பார்லரில் செக்ஸ் தொழில் நடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து மகளிர் ஆணையம் அதிரடி சோதனை நடத்தி, 4 பெண்களை மீட்டுள்ளனர்.
விதவிதமான பெண்களுடன் மெனு கார்டு! அசர வைக்கும் ரேட் கார்டு! மாநகரத்தை கலக்கிய விபச்சாரம்! சிக்கிய அழகிகள்!
டெல்லியில் உள்ள புராரி பகுதியில் இயங்கும் 18 பிளஸ் பியூட்டி டெம்பிள் எனும் மசாஜ் பார்லரில் செக்ஸ் தொழில் நடப்பதாக, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவால் உள்ளிட்டோருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு அதிரடி சோதனை நடத்தியவர்கள், அங்கிருந்து விலைப் பட்டியல், ஆணுறைகள், செக்ஸ் பொசிஷன் பற்றிய கையேடு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதன் அடிப்படையில் அங்கே செக்ஸ் தொழில் நடப்பதை உறுதி செய்த அவர்கள், அந்த தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை மீட்டனர். அந்த மசாஜ் பார்லருக்கு, எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் கேட் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், மகளிர் ஆணைய குழு தெரிவிக்கிறது.
ஸ்வாதி மலிவால் தலைமையில் டெல்லி மகளிர் ஆணைய குழுவினர் ,டெல்லி முழுக்க சட்டவிரோதமாக நடைபெறும் செக்ஸ் தொழிலை தடுக்க தீவிர சோதனைகளை அவ்வப்போது நடத்தி, பெண்களை மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது.