இந்த பக்கம் வருவியா டா? போலீஸ் அதிகாரிக்கு அடி, உதை..! வழக்கறிஞர் செய்த பகீர் சம்பவம்! வைரல் வீடியோ!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் திஸ்ஹசாரி சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களில் ஒருவர் பைக்கில் வந்த காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கி ஓடவிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சென்ற சனிக்கிழமை அன்று திஸ்ஹசாரி நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்தனர். மேலும் 19 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து நாசம் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தீயாக பரவ அதனை கண்ட டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து முன்னாள் நீதிபதியான எஸ்பி கார்க் என்பவர் இவ்விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்துவார் என்று அறிவித்தது. விசாரணை நிலுவையில் இருப்பதால் சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் மற்றும் கூடுதல் காவல்துறை ஆணையர் ஹர்ஜந் சிங் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறை ஆணையருக்கு நீதிமன்றம் அறிவுரை செய்தது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரே வக்கீல் மீதும் நடவடிக்கையும் வற்புறுத்தலுக்கு எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடந்த மோதலை கண்டித்து டெல்லி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட வழக்கறிஞர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்ததோடு நவம்பர் 4 முதல் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர். அதன்படி காலை 10 மணி அளவில் தொடங்கிய போராட்டம் குற்றவாளிகளை கைது செய்யும் வரை நிற்காமல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஷாகெட் என்ற மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவரைக் கண்டு ஆத்திரமடைந்த வழக்கறிஞர் ஒருவர் அவரிடம் சென்று பளார் பளார் என கன்னத்தில் அறைந்து அங்கிருந்து விரட்டி அடித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.