சென்னை: ஹீரோயினுக்கு ரூட் விடும் டைரக்டர் பற்றிய ரகசியம் பட விழா மூலமாக வெளியாகியுள்ளது.
மாஸ் நடிகர் முன்னிலையில் மாளா நடிகைக்கு ரூட் விட்ட இளம் டைரக்டர்..! கேமரா இருப்பதை மறந்து செய்த ரொமான்ஸ்!
மாஸ் காட்டும் தளபதி நடிகர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது. இதன்போது, படத்தின் இயக்குனரும், ஹீரோயினும் அருகருகே ஒன்றாக அமர்ந்திருந்தனர். அதனை கேமிராக்கள் அடிக்கடி பிளாஷ் செய்தன. அந்த இயக்குனர் சற்று ரொமான்ஸ் பேர்வழி என்பதால், நடிகையை தனது கையில் பிடித்து வைக்க முயற்சிக்கிறார் என்று, இந்த வீடியோ, புகைப்படங்களை பார்த்த கோலிவுட் ஆசாமிகள் குறிப்பிடுகின்றனர்.
2 படங்களை மட்டுமே இயக்கியுள்ள அந்த இயக்குனர், 3வது படமாக தளபதி நடிகரின் பட வாய்ப்பு கிடைத்ததும் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்த படத்தில் நடிப்பதற்காக, ஆந்திராவில் இருந்து புதிய நடிகையை அவர் அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்த மோகனமான நடிகையை தளபதியான நடிகருடன் கூட அதிகம் பழகவிடாமல் இயக்குனர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.
படப்பிடிப்புத் தளத்தில் இதனை கண்டுபிடித்த நடிகரே அதிர்ச்சியடைந்துவிட்டாராம். இருந்தாலும், இதனை வெளியில் காட்டிக்காமல் அவர் உள்ளாராம். படப்பிடிப்புத் தளத்தை தாண்டி தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அதேபோல, நடிகையை ஒட்டியபடியே இயக்குனர் நெருக்கமாக சுற்றியதால், பலரும் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த விசயம் சீரியசாக மாறியுள்ளதையே இது காட்டுகிறது, இதனை தளபதி நடிகர் உடனடியாக கண்டிக்காவிட்டால், பெரும் பிரச்னையாக மாறலாம், என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.