திமுக பெண் பிரமுகர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற இன்டாலியன் சமையல் பாத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.
வாக்காளர்களுக்கு கொடுக்க விதவிதமாக சமையல் பாத்திரம்! பறக்கும் படையிடம் சிக்கிய திமுக பெண் பிரமுகர்!
சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசார், சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் சாலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக புதிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணித்தபோது சாலையோரமாக இருந்த இன்டாலியனால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பாத்திரங்களை அடுக்கு வைத்து கொண்டு செல்ல முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திமுக பிரமுகர் என்றும், அவற்றை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்வது தெரியவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதற்குரிய ஆவணங்கள் எதுவும் பூங்கொடியிடம் இல்லாததால் உள்ளே இருந்த மொத்தம் 100 பாத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்