தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவ என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள்! என்னென்னனு தெரியுமா?
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து
ஒரு வழியாக தொகுதிப் பங்கீட்டை அறிவித்துள்ளது தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.
இவற்றில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கும் உடன்பாட்டில்
ஸ்டாலினும் – காங்கிரசின் கே.சி.வேணுகோபாலும் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி புதுச்சேரி
தொகுதி காங்கிரசுக்கு என்பது உறுதியாகியுள்ளது. எஞ்சிய 9 தொகுதிகள் தமிழகத்தில் வழங்கப்பட
உள்ளன.
அதன்படி காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை எவை
என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1) நாகர்கோவில்
2) விருதுநகர்
3) சிவகங்கை
4) திருச்சி
5) மயிலாடுதுறை
6) சேலம்
7) ஈரோடு
8) கரூர்
9) திருவள்ளூர்
அல்லது காஞ்சிபுரம்
ஆகிய ஒன்பது தொகுதிகளை காங்கிரசுக்கு தி.மு.க கொடுத்துள்ளதாக
கூறுகிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே தொகுதிப்பங்கீடு முடிந்த பிறகு பேசிய மு.க.ஸ்டாலின்
தே.மு.தி.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று கூறினார். மேலும் அ.தி.மு.க
அமைத்திருப்பது மக்கள் நலக்கூட்டணி இல்லை பண நலக் கூட்டணி என்றும் கூறியுள்ளார்.