துரைமுருகனுக்கு நெருக்கமான நபருடைய குடோனில் பிடிபட்ட பணத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று துரைமுருகன் சூடம் ஏற்றி சத்தியம் செய்து வருகிறார் என்றாலும் நம்பத்தான் யாரும் தயாராக இல்லை.
எங்களை வைச்சு செய்யுறாங்க! இன்னும் செய்யப் போறாங்க! துரைமுருகன் சரண்டர்! திமுகவினர் சரண்டர்!
தீவிரமாக கதிர் ஆனந்த் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினால் மீண்டும் மத்திய, மாநில அரசுகள் ஆப்படிக்கத் தயாராக இருக்கிறதாம். அடக்கி வாசித்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டமாக இருக்கிறதாம்.
இதைத் தெரிந்துகொண்டு, இன்று மீண்டும் அலறல் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார் துரைமுருகன். அந்த அறிக்கையில், ‘மத்திய, மாநில அரசுகள் பழி சுமத்த பார்க்கின்றன; தேர்தலில் வெற்றி-தோல்வி சகஜம், எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துப் போர் புரிவது தான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழி வாங்க நினைப்பதும், வீண் பழி சுமத்தி அவமானப்பட வைப்பதும் இன்றைய அரசியலில் ஆளும் கட்சியில் மேலோங்கி நிற்கிறது.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டுத்தான் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த், கல்லூரி, வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இப்போது எங்களைச் சுற்றி கண்காணிப்பு வளையம் உருவாக்கியிருப்பதோடு, மேலும் சில செயல்களில் மாநில, மத்திய அரசு ஈடுபட இருப்பதாக தெரியவந்துள்ளது.
அவர்களாகவே எதாவது ஒரு பொருளை வைத்துவிட்டு, சோதனையில் எடுத்ததாக கணக்குக் காட்ட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது ஜனநாயகத்துக்குப் புறம்பானது, பாசிச முயற்சி என்றெல்லாம் கொந்தளித்திருக்கிறார்.
எல்லாம் சரிப்பா… எப்படிப்பா இத்தனை கோடி வந்திச்சுப்பா. எம்.ஜி.ஆர்.தானப்பா உனக்கு ஃபீஸ் கட்டி படிக்க வைச்சார்… என்று வருமான வரித்துறை கேள்வி மேல் கேள்வி கேட்குதாம்.அடிச்சுத் தூக்கு..