ரஜினிகாந்த் என்ன கட்சித்தலைவரா? வெற்றிடம் இருக்கிறது என்று அவர் எப்படி சொல்லமுடியும் என்று ஏற்கெனவே ரஜினிக்கு எதிராக கம்பு சுற்றியிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மீண்டும் ரஜினியை வம்படியாக வம்புக்கு இழுத்திருக்கிறார்.
ரஜினியை வம்புக்கு இழுக்கும் எடப்பாடி பழனிசாமி! அதுக்காக சிவாஜியை கேவலப்படுத்தலாமா?
எங்களைப் போன்றவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் இருக்கிறோம், மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். ஆனால், நடிகர்கள் எல்லாம் அப்படியா?
வயதாகிவிட்டது என்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள் என்று ஒரே நேரத்தில் ரஜினியையும் கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்தார்.
அது போதாது என்று, எம்.ஜி.ஆருக்கு அடுத்து புகழோடு இருந்த சிவாஜிகணேசன் அரசியலுக்கு வந்து என்ன ஆனார் என்பதை இவர்கள் பார்க்க வேண்டும் என்று போகிற போக்கில் சிவாஜியின் அரசியல் தோல்வியையும் குத்திக் காட்டினார்.
இந்த விவகாரத்தில் ரஜினி ஏதாவது பதில் சொல்வாரா என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சும்மா கிடந்த எங்க தலைவரை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் என்று சிவாஜி ரசிகர்கள் எடப்பாடி மீது பாய்ந்திருக்கிறார்கள்.
எப்படியாவது அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் அல்லது வரமாட்டேன் என்று விலக வேண்டும், அதுவரை இந்த அக்கப்போர் தொடரும் என்கிறார்கள்.