ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் படிக்கட்டில் நின்றிருந்த பெண் பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐ முன்னாடி சீட் காலியாகுது..! ஓடும் பஸ்ஸில் இடம் பிடிக்க ஓடிய பெண்மணிக்கு நொடியில் ஏற்பட்ட பயங்கரம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி இவரது மனைவி முத்தம்மாள். சம்பவதினத்தன்று முத்தம்மாள் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார்.அப்போது பேருந்தில் கூட்டநெரிசலில் சற்று அதிகமாக இருந்த காரணத்தினால் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து பவானிசாகர் டவுன்ஷிப் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பேருந்து கரடுமுரடான சாலையில் சென்றுள்ளது. இதனால் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த முத்தம்மாள் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அனைவரும் கூச்சலிடத் தொடங்கினர்.
இதையடுத்து பேருந்தும் உடனே நிறுத்தப்பட்டது கீழே விழுந்த முத்தம்மாளின் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.உடனே அனைவரும் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் முத்தம்மாள் படிக்கட்டில் இருந்து தவறி விழும் காட்சி பஸ்ஸில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.