திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தந்தை பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்ப முடிவு செய்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நீண்ட போராட்டங்களுக்குப் பின் பள்ளியில் மீண்டும் சேர்ந்துள்ளார்.
தவறான எண்ணம்! பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய தந்தை! தவித்த மாணவி! பிறகு நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்!
துறையூரை அடுத்த வீட்டு பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. வறுமையான குடும்பச் உங்களுக்கிடையே இவரது மகன் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவரது மகள் நிரஞ்சனா துறையூரை அடுத்த கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார்.
இந்நிலையில் ஒருமுறை குடும்பத் தகராறு ஏற்பட்டபோது தனது மகளின் படிப்பை நிறுத்தி விட சுப்பையா முடிவு செய்தார். மேலும் மகளை பஞ்சாலைக்கு அனுப்பி சம்பாதிக்கவும் ஏற்பாடு செய்தார். இந்த தவறான எண்ணம் காரணமாக மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர் டிசி கேட்டபோது நிரஞ்சனா நன்றாக படிக்கக்கூடிய மாணவி என்பதால் அவரது படிப்பை நிறுத்த வேண்டாம் என்று பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதை காதில் வாங்காமல் சுப்பையா பிடிவாதமாக டிசியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
தந்தை தன்னை வேறு பள்ளியில் சேர்க்க போகிறார் என்ற நம்பிக்கையில் நிரஞ்சனா டிசிக்காக கையெழுத்திட்டார். ஆனால் சுப்பையா தனது மகளை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனா எலி மருந்தை குடித்தார்.
இதையடுத்து நீண்ட மருத்துவ போராட்டங்களுக்கு பிறகு அவர் காப்பாற்றப்பட்டார். படிப்பதற்காக உயிரைவிடவும் அவர் துணிவார் என எதிர்பார்க்காத தந்தை சுப்பையா தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து மகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இசைந்தார் ஆனால் சூழ்நிலை வேறு மாதிரியாக இருந்தது.
நிரஞ்சன படித்த பள்ளியிலும் அவரைச் சேர்க்க மறுத்த நிலையில் மற்ற பள்ளிகளும் நிரஞ்சனா படித்த பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டு நிரஞ்சனாவிற்கு இடம் தர மறுத்தன. இதனால் விரக்தி அடைந்த நிரஞ்சனா தன் வயது மாணவிகள் எல்லாம் பள்ளிக்குச் செல்லும் போது தான் வீட்டில் இருப்பதை விட இறந்து போயிருக்கலாம் எனக் கூறி அழுதார்
இதையடுத்து மாவட்ட ஆட்சியரை நாடியும் அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலையில் சில பத்திரிகை நண்பர்கள் நிரஞ்சனாவிற்கு உதவி செய்ய முனவந்தனர். மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்ட அவர்கள் அவரது ஆலோசனையின் பேரில் நிரஞ்சனா படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு நிரஞ்சனாவின் வீட்டில் நடந்த விவரங்களை விளக்கினர்.
அதன்பேரில் அவர் படித்த பள்ளியிலேயே நிரஞ்சனா மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் பள்ளிக்கு சென்று வருகிறார்