அபுதாபி: நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஆபாசமாக நடந்துகொண்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
நடுவானம்..! ஆண்களை உறவுக்கு அழைத்து 20 வயது இளம் பெண்! விமானத்தில் அரங்கேறிய கிளுகிளு சம்பவம்! ஆனால்?
அபுதாபியில் இருந்து, மான்செஸ்டர் நோக்கிச் சென்ற விமானத்தில் டெமி பர்டன் என்ற 20 வயது இளம்பெண் பயணித்தார். அவர் விமானத்தில் பறக்க பயப்பட்டதால், பயத்தை போக்குவதற்காக, மது அருந்தியுள்ளார். எனவே, போதை உச்சத்தில் இருந்த நிலையில், விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, டெமிக்கு என்ன செய்வதென தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் போதை போதாமல், கூடுதலாக மதுபானம் தரும்படி விமான ஊழியர்களிடம் மல்லுக்கட்டியுள்ளார். அவர்கள் மறுக்கவே, உடனடியாக, ஊழியர்களை அடித்து உதைத்துள்ளார். பிறகு, சக பயணிகளை நோக்கி ஆபாச சைகை காட்டிய டெமி, ஆடைகளை அவிழ்த்தபடி, தன்னுடன் செக்ஸ் செய்ய வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். இதனால், விமானமே ரணகளமானது.
இதையடுத்து, அவரை அனைவரும் சேர்ந்து சமாதானப்படுத்தி, அமர வைத்திருக்கின்றனர். மான்செஸ்டர் சென்றடைந்ததும் அவர் உடனடியாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெமிக்கு, 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.