கூப்பிட்ட போதெல்லாம் முந்தி விரித்தேன்! இப்படி செய்துவிட்டான்! கதறும் காதலி!

திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.


மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த பெண் டி.கல்லுப்பட்டியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது ஸ்டூடியோவிற்கு அடிக்கடி வந்து செல்லும் அபிஷேக் 24 ,என்பவருடன் அப்பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் அவர்களுக்கு இடையே உள்ள நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் காதலித்து வந்த நாட்களில் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அப்பெண் ஸ்டுடியோ வேலையை விட்டுவிட்டு சென்னை சென்று அங்கு ஒரு வக்கீலிடம் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து சென்னையில் தனியே அறை எடுத்து அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அபிஷேக் சென்னை வந்து அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உறவு கொண்டுள்ளா. இந்நிலையில் அப்பெண் கர்ப்பமான நிலையில் அபிஷேக்கிடம் தெரிவித்துள்ளார் இதைக்கேட்ட அபிஷேக் கர்ப்பத்தை கலைத்து விடும்படி கூறிய நிலையில் அப்பெண் கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.

பின்னர் அபிஷேக் இடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டபோது அவர் அதற்கு மறுத்துள்ளதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டால் தன்னைக் கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மனமுடைந்த அப்பெண் பேரையூர் காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார்.

அப்பெண் அளித்த புகாரின் பேரில் அபிஷேக் மற்றும் அவரது தந்தை நாகராஜ் தாய் ஜானகி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.