சென்னையில் முஸ்லீம்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை மீது புகார் எழுந்துள்ளது.
முஸ்லீம்களுக்கு மட்டும் வட்டியில்லா நகை கடன்! நம்பிச் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ரூபி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வட்டியில்லாமல் நகைக் கடன் வழங்கப்பட்டது. உரிமையாளர்கள், அனீஸ் மற்றும் சையது இப்ராஹிம் ரொம்ப நல்லவர்கள் போல் என்று நினைத்தனர் அப்பகுதி மக்கள்.
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லீம் பெண்கள் ரூபி நகைக்கடையை தேடி வந்து தங்கள் நகைகளை அடகு வைத்துச் சென்றனர். வெறும் அசல் மட்டும் தான் என்பதால் மாதம் மாதம் தவறாமல் அதனை செலுத்தியும் வந்தனர்.
இந்நிலையில் ரூபி நகைக்கடை திடீரென மூடப்பட்டது. சரி எங்காவது வெளியூர் சென்று இருப்பார்கள் என்று முஸ்லீம்கள் நினைத்தனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் கடைகள் திறக்கவில்லை. இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் அறிந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் 50 பேர் நேற்று வந்து புகார் அளித்த நிலையில் இன்று அவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது- எனவே கோடிக்கணக்கான ரூபாயுடன் மாயமான ரூபி நகைக்கடை உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.