சிறுமி பலாத்கார கொலை, டிரைவருக்கு தூக்கு தண்டனை! நடுரோட்டுல தூக்கு போடுங்க சார். இன்னும் ஒரு கொலையாளி எங்கே?

சிறுமி என்றும் பராமல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சந்தோஷ்குமாருக்கு இன்று தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த கொடூரனுக்கு நடுரோட்டில் வைத்து தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, சிறுமியின் ஆத்மா சாந்தியடையும் என்று மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். கோவை பன்னிமடை ஏரியாவைச் சேர்ந்த சதீஷ்-, வனிதா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். அவர்களின் முதல் குழந்தையான ஆறு வயதேயான ரிதன்யாஸ்ரீ, திப்பனூர் அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த மார்ச் 25ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீட்டிற்கு வரவில்லை என்றதும் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் தடாகம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அடுத்த நாள் காலை சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள மறைவான சிறிய சந்து பகுதியில், கை கால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி இறந்து கிடந்தார். சிறுமியின் உடலில் கத்தியால் கீறிய காயங்களும், முகத்தில் டீ சர்ட் போட்டு மறைக்கப்பட்டும் இருந்தது. இதுகுறித்து தடாகம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தை பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறி, அவருக்கு மரண தண்டனை அளித்திருக்கிறார். 

இந்த கொடூரனை பொதுமக்கள் மத்தியில் தூக்கு போட்டால்தான், அடுத்து யாரும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட மாட்டார்கள், இறந்த குழந்தையின் ஆத்மாவும் சாந்தியடையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் இன்னும் ஒருவரது டி.என்.ஏ.இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தோஷ்குமாரின் கூட்டாளி தப்பிக்க விடப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.