ரெக்கார்டு டான்ஸ் புகழ் சப்னா சவுத்ரியின் அடுத்த புரொஜெக்ட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

டெல்லி: ஹரியானா பாடகி சப்னா சவுத்ரியின் அடுத்த புரொஜெக்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹரியானாவைச் சேர்ந்த பாடகி சப்னா சவுத்ரி வெளியிடும் இசை ஆல்பங்களுக்கு சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. அவரது கவர்ச்சியான பாடல்களுக்கு அடித்தட்டு மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை அடிமைகளாக உள்ளனர். சமீபத்தில், அவர் பாஜக.,வில் இணைந்தது இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும். 

இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''Shooter'' என தலைப்பிட்டு, போஸ்டர் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதுதவிர, #ComingSoon #AlbumWork #DesiQueen #ThankGod போன்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் எழுதியுள்ளார்.

அந்த போஸ்டரில் சப்னா சவுத்ரி, ஆகாஷ் வாத்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதை வைத்துப் பார்த்தால், புதியதாக, ஷூட்டர் என்ற ஆல்பத்தை அவர் தயாரித்து வருவதாகவும், விரைவில் வெளியிடுவார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர். 

இசை ஆல்பங்கள் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் அவர் சில ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 'Teri Aakhya Ka Yo Kajal' மற்றும் 'Hatt Ja Tau' போன்றவை அவரது பாடல்களில் மிகப்பெரிய ஹிட் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.