உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் கேரட் என்னவெல்லாம் செய்யும்னு தெரியுமா?

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.


அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.உடல் எடையைக் குறைக்கும் : குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும். கோடைகாலத்தில் ஏற்படும் சருமநோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். கோடையில் முகம் கருமையாவதை தடுக்கும். முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும்.

கேரட்டில் உள்ள பொட்டாடிசியம், வைட்டமின் எ போன்றவை உடலின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் முகப்பரு, கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை.