மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும்.
தீவிர மூல நோய்க்கும் மாதுளை சாறு மிக சிறந்த மருந்து! வேறு எதற்கெல்லாம் இது உதவுகிறது?
மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையலாம். உலர்ந்த மாதுளைப் பட்டையின் தூளினை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் மோர் கலந்து தடவுவதன் வழையாக மூல நோயினால் இரத்தப்போக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே மூல நோயின் தீவிரத்தைக் குறைக்க மாதுளைப் பழத்தினை நாடுவதே நலம் பயக்கும்.
மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.
மாதுளை ஜூஸில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது இரத்த சோகையை சரிசெய்ய உதவும். இந்த ஜூஸி இரும்புச்சத்தும் வளமான அளவில் நிறைந்துள்தால், இரத்த சோகை நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாதுளை ஜூஸில் உள்ள வைட்டமின் கே, இரத்தம் உறைவதைத் தடுக்கும் மற்றும் ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவும்.
மாதுளை ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும். முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.