வட மாநிலங்களில் பலத்த அனல்க் காற்று வீசிவருவதால் , பலி எண்ணிக்கை 117 ஆக உயர்ந்ததை அடுத்து அம்மாநிலம் 144 தடை பிறப்பித்து உள்ளது.
அனல் காற்றுக்கு 117 பேர் சாவு! முக்கிய நகரத்தில் மக்கள் வெளியே வர 144 தடை!
பீகார் மாநிலத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருப்பதால் பலத்த அனல்க்காற்று வீசி வருகிறது . இதில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே, மங்கரில் 5 பேர், அவுரங்க பாத்தில் 60 பேர் மற்றும் கயாவில் 35 பேர் என பலி எண்ணிக்கை கடகடவென உயர்ந்து வருகிறது.
இதில் பொது மக்கள் இந்த வெயில் தாக்கத்தில் தப்பித்துக்கொள்ள காலை 11- மாலை 4 மணி வரை பொது மக்கள் வெளியே நடமாட வேண்டாம என அறிவித்திருந்த நிலையில் , அம்மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதனால் கட்டிட வேலை செய்பவருக்கு வேலை நேரம் மற்றும் பொது இடங்களில் கூட்டங்கள் என எல்லா பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பாதிக்கபட்ட சிகிச்சைப்பெற்று வரும் மக்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் மாநில முதல்வர் நிதிஸ் குமார்,
அரசு தேவையான அனைத்து உதவிகளும் கட்டாயமாக அளிக்கும் எனவும் பலியானோருக்கு ரூ 4 லட்சம் வரை நிதியுதவி அளிக்க்படும் எனவும் தெரிவித்தார். மேலும்,மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், வெயில் தாக்கத்தினால் மக்கள் பலியாவதை தடுக்க முடியாது எனவும் கூறினார்.
இந்த வெயில் தாக்கம் மூளையை பாத்திக்கும் அளவில் அபாயகரமானதால் கூடுமான அளவில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்கிடையில் பீகாரில் பள்ளி கல்லூரிகளுக்கு ஜீன் 22 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்க்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.