கத்தை கத்தையாக பணம்! வளர்ப்பு நாய் செய்த விபரீதம்! மயங்கி விழுந்த உரிமையாளர்!

இங்கிலாந்து நாட்டில் நாய் ஒன்று தனது உரிமையாளரின் பணத்தை விழுங்கியது.


இங்கிலாந்து நாட்டில் உள்ள  வேல்ஸ் பகுதியில் ஜூடித் ரைட் என்பவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். லேப்ராடூடுல் வகையை சேர்ந்த அந்த யாக்க்கு ஓசி என  பயரிட்டு அவர் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் ஜூடித்துக்கு தர வேண்டிய பணத்தை,  தபால் உறையிலிட்டு அவரது வீட்டின் தபால் பெட்டியில் போட்டுச் சென்றுள்ளார். அப்போது பசியிலிருந்த வளர்ப்பு நாய் ஓசி, அந்த கவரை எடுத்துள்ளது. அதிலிருந்த பணம் சாப்பிடும் வகையில் நறுமணத்துடன் இருந்தள்ளது.

இதனால் பசியில் இருந்து ஓசி லபக் லபக் என்று தின்று தீர்த்துள்ளது. மொத்தமாக 160 பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ரூபாயை சாப்பிட்டுள்ளது செல்ல நாய் ஓசி. 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜீடித், தனது செல்ல நாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மேலும் 11 ஆயிரம் ரூபாய் செலவழித்து சிகிச்சை அளித்துள்ளார். பிளாஸ்டிக்கினால் ஆன பணத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். நல்ல வேளையாக நாய்க்கு எதுவும் ஆகவில்லை என பணத்தை இழந்த ஜூடித் நிம்மதி பெருமூச்சு விட்டார்.