முட்டைகோஸ் பொரியல் அலுத்து விட்டதா?. இப்படி மசாலா சேர்த்து செய்து பாருங்க!!!

முட்டைகோஸை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடேறினதும் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை அதில் சேர்க்கவும்.


நறுக்கிய முட்டைகோஸை அதில் போட்டு 4 முதல் 5 நிமிடம் வதக்கவும். முட்டைகோஸ் நன்றாக வெந்ததும் அதில் பட்டாணியை சேர்க்கவும்..தீயை சிம்மில் வைத்து ஆர்கானிக் உப்பையும் சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வேகவைக்கவும்.

பின்னர் தக்காளி ப்யூரியை அதில் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து மூடியால் மூடி இன்னும் ஒரு 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போ மூடியை திறந்து எல்லா காய்கறிகளையும் நல்லா கிளறிவிட்டு 2 நிமிஷம் அதிகமான தீயில் வைச்சு வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.

சுவையான முட்டைகோஸ் பட்டாணி மசாலா ரெடி. ரொட்டி அல்லது சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா தொட்டு சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.