புதுச்சேரியில் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த மனைவி, தட்டிக் கேட்ட கணவனை பழச்சாறில் விஷம் கலந்து கொன்றார்.
பலருடன் செக்ஸ்! கண்டுபிடித்த கணவனுக்கு ஜூசில் விஷம்! விபரீத மனையின் கொடூர செயல்!
முதலியார்பேட்டை நுாறடி சாலை, வட்டார போக்குவரத்து அலுவலக கால்வாயில் கடந்த 6ம் தேதி காலை சந்தேகத்துக்கிடமான வகையில் கிடந்த மூட்டையை போலீசார் பிரித்து பார்த்தபோது, 38 வயதுடைய ஒரு ஆண் சடலம் இருந்தது.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லித்தோப்பு பெரியார் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி ஸ்டெல்லாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர் பின்னர் அதிர்ச்சியளிக்கும் வகையிலான உண்மைகளை ஒப்புக்கொண்டார்.
தங்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ள நிலையில் கணவனுக்கு குடிபழக்கம் இருந்ததால் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கணவனால் முடியவில்லை என ஸ்டெல்லா தெரிவித்தார். இதையடுத்து தனது தங்கை மூலம் சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், கணவன் இல்லாத நேரத்தில் அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து போனதால் கமலக்கண்ணன் தகராறில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ஸ்டெல்லா தெரிவித்தார்
கடந்த 4-ஆம் தேதி தனது கணவனுக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததில் அவர் மயங்கி விழுந்தததாகவும் அவர் பிழைத்துவிடக் கூடும் என சந்தேகம் எழுந்ததால் தானும் தனது ரெஜினாவும் கமலக் கண்ணனின் கைகளை பிடித்துக்கொள்ள ரெஜினாவின் ஆண் நண்பனான ரவுடி தமிழ்மணி, கமலக்கண்ணனின் மூக்கு மற்றும் வாயில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஸ்டெல்லாவை கைது செய்த போலீசார், அவரது சகோதரி ரெஜினா, ரவுடி தமிழ்மணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை தேடிவருகின்றனர்.